தலைமை காவலர் வேன் மோதி பலி - அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு...!

திருச்சியில் விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தலைமை காவலர் வேன் மோதி பலி - அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு...!
Published on

திருச்சி மாவட்டம் ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் தங்கவேல் (வயது 59). மருத்துவ விடுப்பில் உள்ள இவர் இன்று துறையூரிலிருந்து தா.பேட்டை சென்றுள்ளார். அப்போது சக்கம்பட்டி அருகே வந்தபோது பயணிகள் வேன் ஒன்று தங்கவேல் ஓட்டிச்சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தா.பேட்டை போலீசார் தங்கவேலின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து துறையூர் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com