திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தலைமை பொறியாளர் சந்திரா ஆய்வு


திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தலைமை பொறியாளர் சந்திரா ஆய்வு
x
தினத்தந்தி 10 Jun 2025 6:57 AM IST (Updated: 10 Jun 2025 8:21 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை இடர்பாடுகளின்போது தொடர் விழிப்பு மற்றும் கண்காணிப்புடன் பணிகளை மேற்கொள்ளுமாறு திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் சந்திரா, செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

திருநெல்வேலி

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் வருங்கால மின் தேவையை கருத்தில் கொண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதிதாக அமைய இருக்கும் துணைமின் நிலையத்தின் இடத்தை திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் சந்திரா நேற்று (9.6.2025) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு பணியின்போது உபமின் நிலையத்திற்க்கு கொண்டு வரப்படும் மின்பாதைகளின் வழிதடங்களின் பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு, மின் வழித்தடத்தில் மின்னூட்டம் வழங்கும் பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் அமைந்துள்ள மின்மாற்றி செயல்பாடுகள் மற்றும் சமதானபுரம், கொக்கிரகுளம், ரெட்டியார்பட்டி, ஸ்ரீவைகுண்டம், துணைமின் நிலையங்களுக்கு செல்லும் மின் கட்டுமான அமைப்புகள், முறப்பநாடு, கிருஷ்ணாபுரம், ஏ.ஆர்.லைன், மார்க்கெட், சாந்திநகர், வாட்டர் ஒர்க்ஸ், அகரம் வாட்டர் ஒர்க்ஸ், கே.டி.சி.நகர் வடக்கு, ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மின் பாதைகளுக்கு உண்டான மின் கட்டமைப்புகள் மின்னழுத்தம் குறித்து முறையாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் இயற்கை இடர்பாடுகளின்போது உடனடியாக மாற்று வழி மின்சாரம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டார் மேலும் உபமின் நிலையத்தில் உள்ள அனைத்து தரவுகளையும் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு தொடர் விழிப்பு மற்றும் கண்காணிப்புடன் பணிகளை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டார். மேற்கண்ட ஆய்வு பணியின்போது திருநெல்வேலி மண்டல திட்டங்கள் செயற்பொறியாளர் ரவி, திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன், திருநெல்வேலி மண்டல உதவி செயற்பொறியாளர் (மேம்பாடு) பேச்சிமுத்து, திருநெல்வேலி மண்டல உதவி செயற்பொறியாளர் (அமைப்பியல்) கோகிலா, பாளையங்கோட்டை உப கோட்ட உதவி செயற்பொறியாளர் ஜெயசீலன், உதவி மின் பொறியாளர்கள், தெரேசாபாக்கியவதி, அருணன், சுடர், தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

1 More update

Next Story