கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆய்வு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 13-ந்தேதி முதல் நடந்து வருகின்றன.
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆய்வு
Published on

கீழடியில் 9 குழிகள் தோண்ட நூல் கட்டி அளவீடு செய்து ஒரு குழி மட்டும் 3 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது. இந்த குழியில் பாசி, மணிகள், சில்லு வட்டுகள் மற்றும் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி நேற்று வந்தார். அவரை மாவட்ட உரிமையியல் நீதிபதி அச்சுதன் வரவேற்றார். பின்பு தலைமை நீதிபதி, கீழடியில் குழி தோண்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் பற்றிய விவரம் கேட்டறிந்தார். தலைமை நீதிபதியிடம் தொல்லியல் அலுவலர்கள் பாஸ்கரன், அஜய்குமார் ஆகியோர் விளக்கி கூறினார்கள். பின்பு 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்தையும் தலைமை நீதிபதி பார்வையிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com