ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பு பெற்றிருக்கும் கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதான அங்கீகாரமே இது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சர்வதேச சினிமா உலகில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும் விதமாக, நடிகர் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா ஆகியோர் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் சேர்வதற்கான அழைப்பைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்!

மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com