மழை பாதிப்புகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை

மழை பாதிப்பு குறித்து நாளை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
மழை பாதிப்புகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில், தான் விரைவில் குணமடைந்து அரசுப் பணிக்கும், கட்சிப் பணிக்கும் திரும்புவேன் என முதல்-அமைச்சர் கூறியிருந்தார்.

இன்று தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து பல்வேறு திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திற்கு வருகை தர உள்ளார்.

அப்போது தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10 மணியளவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர்கள் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com