நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

கரூர் மாவட்டம் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
Published on

கரூர்,

கரூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் வாய்க்கால் பகுதியில் உள்ள, 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறுகிறது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஆத்துப்பாளையம் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக நொய்யல் வாய்க்காலில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த உத்தரவு அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com