சென்னையில் புயல், மழை பாதிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட உள்ளார்

சென்னையில் புயல், மழை பாதிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.
சென்னையில் புயல், மழை பாதிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட உள்ளார்
Published on

சென்னை,

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் புயல், மழை பாதிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. மேலும் பிற்பகல் 12 மணி அளவில் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் பார்வையிட இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளநிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட முதல்வர் பழனிசாமி அங்கு செல்கிறார். மேலும் வில்லிவாக்கம் உட்பட மேலும் சில பகுதிகளை முதல்வர் பார்வையிட இருப்பதாகவும், நிவாரண முகாம்களையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com