தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதலமைச்சர் பழனிசாமி சந்தித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
Published on

சென்னை,

கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டசபையை எத்தனை நாட்களுக்கு நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்வதற்காக சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், சட்டசபை கூட்டத்தொடரை 3 நாட்களுக்கு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5 மணி அளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேச இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சட்டப்பேரவை வரும் 14ம் தேதி கூட உள்ள நிலையில் ஆளுநருடனான சந்திப்பால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம் அளிப்பதாகவும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com