வெற்று பட்ஜெட்டை மறைக்க வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார் முதல்-அமைச்சர்; எடப்பாடி பழனிசாமி

வெற்று பட்ஜெட்டை மறைக்க, முதல்-அமைச்சர் வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

மக்களுக்கு ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட்டை மறைக்க, ஒரு வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார், " பெயிலியர் (FAILURE) மாடல்அரசின் விளம்பர மாடல்" மு.க.ஸ்டாலின். உலகப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து இந்த பட்ஜெட்டை தயாரித்ததாக அவர் கூறியிருப்பது, இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை.

தன் பட்ஜெட் பற்றி நாளேடுகள் என்ன சொல்கின்றன என்பதை ஆர்வத்தோடு படித்துக் காட்டும் இவர், அதே நாளேடுகளில் நாள்தோறும் வருகின்ற இந்த ஆட்சியின் அவலங்கள் குறித்த செய்திகளை இதே அர்ப்பணிப்புடன் படித்துக் காண்பிப்பாரா?.

உலகத்திலேயே தன் கட்சியின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்களின் பதிவுகளையே , மக்கள் கருத்தாகக் கருதி புளகாங்கிதம் அடையும் ஒரே முதல்-அமைச்சர் ஸ்டாலின் தான்.

தன் பட்ஜெட் பற்றி தலைமைச் செயலக ஊழியர்கள் நினைப்பது என்ன? ஆசிரியர்கள் நினைப்பது என்ன? இதர அரசு ஊழியர்கள் நினைப்பது என்ன? விவசாயிகள், தொழில் முனைவோர், உழைக்கும் மக்கள் நினைப்பது என்ன என்பதே அறியாமல், "ரூ" போட்டதால் பட்ஜெட் ஹிட் ஆகிவிட்டது என்று சினிமா வசனம் பேசுகிறார்.

பட்ஜெட் ஹிட் ஆவது என்பது அறிவிப்பதில் இல்லை- செயல்படுத்துவதில் என்பதே உண்மை. அப்படி பார்த்தால், தி.மு.க ஆட்சிக்கு வந்து போட்ட 5 பட்ஜெட்டுமே அட்டர் பிளாப் (UTTER FLOP) தான்.

72 ஆண்டுகால தமிழ்நாட்டு ஆட்சிகளின் மொத்த கடனையும் 4 ஆண்டுகளில் வாங்கி, கடன் வாங்குவதில் ரெக்கார்டு பிரேக் (Record Break) மற்றும் பிளாக் பஸ்டர் (Blockbuster) சாதனை செய்த ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

இந்த பட்ஜெட் தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் "தி.மு.க.-வின் இறுதி பட்ஜெட்" என்பது மக்களின் கருத்து . இந்த பட்ஜெட்…, சிம்ப்ளி வேஸ்ட் (SIMPLY WASTE..!). இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com