ஈரோட்டில் முதல்-அமைச்சர் விஜய் ரோடுஷோ - மலர்தூவி மக்கள் உற்சாக வரவேற்பு

மகளிர் குழுவினர் அமைத்துள்ள கண்காட்சி அரங்கினை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிடுகிறார்.
ஈரோட்டில் முதல்-அமைச்சர் விஜய் ரோடுஷோ - மலர்தூவி மக்கள் உற்சாக வரவேற்பு
Published on: 

ஈரோடு,

தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங் களை முதல்-அமைச்சர் விஜய் மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கி வருகிறார். இதற்காக மாவட்டம் வாரியாக செல்லும் அவர் அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், 'ரோடு ஷோ' வாயிலாக பொதுமக்களையும் சந்தித்து வருகிறார்.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்கு ழுவினருக்கு தொழில் தொடங்குவதற்காக வங்கிக்கடன் வழங்கும் அரசு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. பெருந்துறை 4 வழிச்சாலை காஞ்சிக்கோவில் ரோட்டில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணா மகாலில் நடை பெறும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மகளிர் குழுவினர் அமைத்துள்ள கண்காட்சி அரங்கினையும் முதல்-அமைச்சர் விஜய் பார்வையிடுகிறார்.

முன்னதாக இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், கோவை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவரை அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் ஈரோடு புறப்பட்டார்.

விஜயமங்கலம் தாண்டியதும் சிப்காட் பகுதி வழியாக முதல்-அமைச்சர் விஜய் 'ரோடு ஷோ' சென்றார். அப்போது வழிநெடுக சாலையின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் த.வெ.க.வினர் முதல்-அமைச்சர் விஜய்க்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்-அமைச்சர் விஜய்யை பார்த்து பெண்கள் என பலரும் ஆரவாரம் செய்தனர். அதற்கு அவரும், அவர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் தொண்டர்களும் பொதுமக்களும் மலர்களைத் தூவியும், முழக்கங்களை எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக பெருந்துறை செல்லும் வழியில் பெருமாநல்லூரில் முதல்-அமைச்சர் விஜய்யுடன் அத்திக்கடவு அவினாசி திட்ட போராட்டக் குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது முதல்-அமைச்சர் விஜய்க்கு விவசாயிகள் வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் சரியாக ஆய்வு செய்யவில்லை எனவும் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் 1400 குட்டைகள் விடுபட்டுள்ளதாகப் முதல்-அமைச்சரிடம் புகார் அளித்தனர். மேலும்1,400 குளம், குட்டைகள் அருகே 1,200 அடிக்கு கீழ் நிலத்தடி நீர்மட்டம் இருப்பதாகவும் 2-வது கட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

X