நந்தம்பாக்கத்தில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் நிதிநுட்ப நகரம் - முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கு அடிக்கல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நந்தம்பாக்கத்தில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் நிதிநுட்ப நகரம் - முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் சென்னை, ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் சுமார் 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம் (FinTech City) அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதற்கு முதற்கட்டமாக ரூ. 254 கோடி மதிப்பீட்டில் 5.6 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் (FinTech Tower) என்ற அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com