தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளரின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரனின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளரின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரனின் தாயார் லீலாவதி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரனின் அன்னையார் லீலாவதி, உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது மறைவால் வாடும் உதயச்சந்திரன், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com