பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கோப்புக்காட்சி
கோப்புக்காட்சி
Published on

சென்னை,

குஜராத் முதல்-மந்திரியாக 4 முறை பதவி வகித்தவரும், நாட்டின் பிரதமராக 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், மாநில கவர்னர்கள், மத்திய மந்திரிகள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,திரைப்பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் ஆண்டுகளில் நீண்ட ஆயுளுடனும், நீடித்த ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com