கனமழை பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு

மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
கனமழை பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு
Published on

சென்னை,

'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். தரமணி, பெருங்குடி மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கி உள்ள நிலையில் முதல்-அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.

ஆய்வின்போது தரமணி 100 அடி சாலையில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி, பால், பிரெட், பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com