வண்டலூர் பூங்காவில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை வண்டலூர் பூங்காவில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வண்டலூர் பூங்காவில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

தாம்பரத்தை அடுத்த வண்டலுரில், பசுமை தமிழ்நாடு இயக்க மரக்கன்று நடும் திட்டத்தை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

வனத்துறை மூலம் தமிழகத்தின் 33 சதவீதம் காடுகளின் பரப்பளவை உயர்த்த ஈர நிலத்திட்டம் செயல்படுகிறது. அதேபோல் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டு அடுத்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 32 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 33 சதவீதம் பசுமை போர்வை எனும் இலக்கை 10 ஆண்டுகளில் அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, இந்த ஆண்டு 2.50 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாற்றாங்கால்களின் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.

வண்டலுர் உயிரியல் பூங்கா அருகேயுள்ள வனத்துறை இடத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார். இவ்விழாவில் 500 மரக்கன்றுகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் நடப்படுகின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com