வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வைகோ தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தோள்பட்டை எலும்பு முறிவுக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது குணமடைந்து வருகிறார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு பின் ஓய்வெடுத்து வரும் வைகோவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com