தமிழகத்தில் ஓடாத தேரையும் ஓட வைத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சேகர்பாபு பாராட்டு

பழனி முருகன் கோயிலில் 100-க்கும் அதிகமான ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு வேத மந்திரங்கள் தமிழில் வாசிக்கப்படுகிறது என்றால் அதற்கு திமுக அரசுதான் காரணம் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
தமிழகத்தில் ஓடாத தேரையும் ஓட வைத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சேகர்பாபு பாராட்டு
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திருவிடைமருதூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிசெழியன், நாச்சியார் கோவில் ராமநாதசாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த அரசு ஆவண செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ராமநாதசாமி கோவிலில் 3 மாதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதன் பிறகு பேசிய கோவிசெழியன்,

பழனி முருகன் கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் சேகர்பாபு, பழனி கோவிலில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக பத்திரிகை முழுக்க, முழுக்க தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் 108 ஓதுவார்கள் வேத மத்திரங்களை முழங்க உள்ளனர்.

முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு ஓடாத தேரையெல்லாம் ஓட வைத்துள்ளார். திருவாரூர் தேரை ஓடவைத்த பெருமை தலைவர் கருணாநிதியை சேரும். நமது முதலமைச்சர் திருத்தணியில் 12 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரையும், சமயபுரத்தில் 13 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரையும், ராமநாதபுரம் ராமநாதசாமி கோவிலில் 18 ஆண்டுகள் ஓடாத தேரையும் ஓடவைத்து பெருமை சேர்த்தவர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com