ராஜீவ் காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
ராஜீவ் காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
Published on

சென்னை,

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கான ராஜீவ் காந்தியின் தொலைநோக்கு முயற்சிகள் நமது முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளில், நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை நாம் நினைவுகூருகிறோம். நவீன, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இந்தியாவுக்கான அவரது தொலைநோக்கு மற்றும் முன்னோடி முயற்சிகள் நமது முன்னேற்றத்திற்கு தொடர்ந்து வழிகாட்டுகின்றன" என்று  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com