

சென்னை,
அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் தொடக்கவிழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், 58 பேருக்கு அர்ச்சகர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.
அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தமிழக வரலாற்றில் முதன்முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.