

சென்னை,
தமிழகத்தின் முக்கிய தொழில்துறை மையங்களுள் ஒன்றாகவும், தொழில் நகரமாகவும் ராணிப்பேட்டை மாவட்டம் திகழ்கிறது. கடந்த 1974-ம் ஆண்டு 1089.82 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை, தற்போது பகுதி 1, 2, 3 மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என விரிவடைந்து மிகப்பெரிய தொழிற்பேட்டையாக உரு வெடுத்துள்ளது.
இந்தப் பகுதியில் தோல் பதப்படுத்துதல், தோல் பொருட்கள் தயாரித்தல், மருந்து உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட சிறு, குறு தொழில், பெரிய நிறுவனங்கள் 500-க்கும் மேற் பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இதன் மூலம் சுற்றுப்புற மக்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், எதிர் காலத்தை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் மாசு இல்லாத தொழில்கள் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டுமென மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு புதிய தொழில்துறை திட்டங் களை முன்னெடுத்து வருகிறது. அந்த வரிசையில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா பனப்பாக்கத்தில் 1,231 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை உருவாக் கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் குழுமம், 5 ஆண்டுகளில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் வாகன உற் பத்தி தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப் பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை டாடா நிறுவனம் மேற்கொண்டது.
அந்த தொழிற்சாலைக்கு 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் அடிக்கல் நாட்டினார். அந்த நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தொழிற்சாலையை இன்று (திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரூ.9,000 கோடி முதலீட்டில், 470 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையின் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. 10 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்க உள்ளது. செப்.2024-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 16 மாதங்களில் உற்பத்தி தொடங்குகிறது.
இந்த ஆலையில், ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலையில், டாடா நிறுவனத்தின் சொகுசு கார்களான ஜாகுவார், லேண்ட் ரோவர் போன்ற கார்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த ஆலைக்கு 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, 16 மாதங்களில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.