

சென்னை,
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா 2வது அலையை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் முதல்-அமைச்சருடன் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
கவர்னருடனான சந்திப்பின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு நிலவரம் குறித்து பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.