பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தலைவர் கலைஞரின் நினைவுகளோடு புத்தாண்டு இரவில் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், “உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026! புத்தாண்டுத் தொடக்கம் முதலே ‘சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!’ எனக் கோலமிட்டு திராவிடப்_பொங்கல் களைகட்டட்டும்!
உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்த புத்தாண்டைக் கொண்டாடுவோம்!” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் புத்தாண்டையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் இன்று இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “தலைவர் கலைஞரின் நினைவுகளோடு புத்தாண்டு இரவில்…” என்று பதிவிட்டுள்ளார்.






