காந்தியின் உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நாட்டின் பல்வேறு தலைவர்களும் காந்தியின் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
காந்தியின் உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
Published on

சென்னை,

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனையொட்டி நாட்டின் பல்வேறு தலைவர்களும் காந்தியின் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அருங்காட்சிய வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com