இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி


இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 15 Aug 2025 9:47 PM IST (Updated: 15 Aug 2025 9:49 PM IST)
t-max-icont-min-icon

இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை,

கீழே விழுந்ததால் தலையில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல.கணேசன் இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் நேரு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, இல.கணேசன் இல்லத்திற்கு வந்து அவரது உடலுக்கு தமிழக கவர்னர்.ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இல.கணேசனின் உடல் நாளை மாலை சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story