முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலம் வருகை: 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் மற்றும் 12-ந்தேதி டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் (11-ந்தேதி) சேலம் வருகிறார். அவர் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் மற்றும் 12-ந்தேதி ஆகிய நாட்களில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலம் மாவட்டத்திற்கு வருகின்ற 11.06.2025 அன்று வருகைபுரிந்து 12.06.2025 வியாழக்கிழமை அன்று காலை காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையினைத் திறந்து வைத்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.

இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் வருகின்ற 11.06.2025 மற்றும் 12.06.2025 ஆகிய இரண்டு நாட்களில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com