

சென்னை,
தமிழ்நாடு பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை, தீய சக்தி திமுகவை கடலில் கரைத்த பெருங்காயமாக மாற்றும். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழகத்திற்கு செய்த சாதனைகளை படித்துப் பார்த்து பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்.
மு.க.ஸ்டாலினுக்கு துணிவிருந்தால், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு மத்திய மோடி அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டு பிரதமர் கூறியிருக்கிறார். தமிழகத்திற்கு மத்திய மோடி அரசு என்ன செய்தது என்று தினமும் பொய்களை கூறும் மு.க.ஸ்டாலின் பிரதமரின் சாதனைகள் குறித்து பதில் அளிக்க தயாரா?
ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் பிரதமர் மோடி குறித்தும் மத்திய அரசு மீதும் பொய்களை கூறி அவதூறு பிரசாரம் செய்யும் மு.க.ஸ்டாலின், பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு ஏன் இதுவரை பதில் அளிக்கவில்லை? இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
மு.க.ஸ்டாலின் ஓடி ஒளியாமல், பாசாங்கு செய்யாமல், நாடகம் நடத்தாமல் கட்டுக் கதைகளை கூறாமல், நேரடியாக பிரதமர் மோடி நாகர்கோவிலுக்கு 15-ந் தேதி வருவதற்கு முன் பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.