கொளத்தூர் தொகுதிக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

இன்று காலை 10 மணிக்கு தனது சொந்த தொகுதியான கொளத்தூருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள தனது சொந்த தொகுதியான கொளத்தூருக்கு செல்ல உள்ளார்.

பின்னர் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

நிகழ்ச்சி - 1.

ராஜாஜி நகர் 4வது தெருவில் முதியோர் இல்லம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.

நிகழ்ச்சி - 2.

ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஹரிச்சந்திரா விளையாட்டு மைதானத்தில் அனித்தா அச்சுவர்ஸ் அகாடமியில் பயின்ற மாணவ மாணவிகள் 356 பேருக்கு தையல் இயந்திரம், 131 பேருக்கு லேப்டாப் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 100 பேருக்கு இலவச கண்ணாடிகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார் .

நிகழ்ச்சி - 3.

ஜி.கே.எம் காலனி 24A தெருவில் புனரமைக்கப்பட்ட குளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

நிகழ்ச்சி - 4.

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 317 மாணவ மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

நிகழ்ச்சி - 5.

பெரியார் நகர் மெட்ரிகுலேஷன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 150 உடல் ஊனமுற்றோருக்கு இருசக்கர வாகனங்கள் (Scooty) வழங்க உள்ளார்.

நிகழ்ச்சி - 6.

புதிதாக கட்டப்பட்ட தனிகாச்சலம் கால்வாயை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com