முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவிடந்தை வருகை

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காலை 10 முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவிடந்தை வருகை
Published on

செங்கல்பட்டு,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், திருவிடந்தை கிராமத்திற்கு இன்று (புதன்கி ழமை)முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக செங்கல்பட்டு மாவட்டம். திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பகுதி களில் டிரோன் பறப்பதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதினிடையே திருவிடந்தை பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காலை 10 முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி செல்லும் வாகனங்கள் திருப்போரூர் வழியாக ஈசிஆர் செல்லலாம். புதுச்சேரி - சென்னைக்கு ஓஎம்ஆர் சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com