வேலூரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
வேலூரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

வேலூர்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்டம் தோறும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில்5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் கை குலுக்கியதோடு, 'செல்பி' எடுத்துக்கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com