பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி


பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி
x

தமிழக வளர்ச்சியில் பா.ஜனதாவுக்கு அக்கறை இல்லை என்று செந்தில்பாலாஜி கூறினார்.

கோவை,

கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பழைய அரசியல் கட்சிகள் புதிய அரசியல் கட்சிகள் என எதுவாக இருந்தாலும் தி.மு.க.வை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாத ஒரு சூழல் தமிழகத்தில் இருக்கிறது. தி.மு.க.வை விமர்சனம் செய்தால்தான் அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும் என்ற சூழல் உள்ளது. அ.தி.மு.க.வை கேட்டால் எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்பார்கள்.

புதிதாக வந்தவர்களை கேட்டால் எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்று சொல்வார்கள். உண்மையான மக்கள் ஆதரவை பெற்ற ஒரு இயக்கமாக தி.மு.க. இருக்கிறது. நாங்கள் யாரையும் போட்டியாளராக பார்க்கவில்லை. மக்கள் இயக்கமாக இருக்கிறோம். யாரையும் குறைவாக நாங்கள் சொல்லவில்லை. பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் நான் போட்டியிடப் போவதாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. கோவை தொகுதி நல்ல தொகுதி. நல்ல மக்கள். என் மீது பாசத்தை வைக்கிறார்கள். சமூக வலைதளங்களில் யாரோ ஒருவர் பேசுவதை நாம் பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தமிழக வளர்ச்சியில் பா.ஜனதாவுக்கு அக்கறை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story