தேஜஸ்வி யாதவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேஜஸ்வி யாதவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
Published on

சென்னை,

பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"பிகார் மாநிலத்தின் துடிப்புமிக்க இளம் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றில் தாங்கள் கொண்டுள்ள பிடிப்பானது முற்போக்கான பிகாரைத் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும். நியாயமான, அனைவரையும் அரவணைத்துப் போற்றும் ஓர் எதிர்காலத்துக்காகப் பணியாற்றி வரும் தாங்கள் வலிமையோடும், வெற்றியோடும் திகழ வாழ்த்துகிறேன்!"

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com