

சென்னை,
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!. அவருக்கு உறுதியான உடல்நலம், நீண்ட ஆயுள் கிட்டி, மக்கள் பணிகளில் தொடர்ந்து செயல்பட இறைவன் அருள் செய்தருள வேண்டும் என்று மனமாரப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.