முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: தஞ்சாவூரில் நாளை டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தஞ்சைக்கு வர உள்ளதையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தஞ்சாவூர்,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4-ம் கட்ட பிரசாரத்தை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தஞ்சை திலகர் திடலில் தொடங்குகிறார்.

தஞ்சைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருவதையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com