முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குஉற்சாக வரவேற்பு

தஞ்சைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குஉற்சாக வரவேற்பு
Published on

தஞ்சைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கலைஞர் கோட்டம் திறப்பு விழா

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதில் அருங்காட்சியகம், திருமண மண்டபம், முத்துவேலர் நூலகம், கருணாநிதியின் உருவச்சிலை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.

வரவேற்பு

இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அங்கிருந்து அவர், காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தஞ்சைக்கு நேற்று இரவு வந்தார். அவருக்கு தஞ்சை மேலவஸ்தாசாவடி அருகே மத்திய மாவட்ட, மாநகர தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மாநகர செயலாளரும், மேயருமான சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அண்ணாதுரை எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத்தலைவர் இறைவன், செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றியக்குழு துணை தலைவர் அருளானந்தசாமி மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், மகளிர் அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் மேளதாளம் முழங்க, தாரை தப்பட்டையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மகளிர் அணியினர் பூரண கும்பம் மரியாதையும், மலர் தூவி அகல் விளக்கு தீபம் ஏந்தி வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com