

சிவகங்கை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சென்றுள்ளார்.
அவர் இன்று காலை காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் ரூ. 61 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேளாண் கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து காரைக்குடியில் திருச்சி பைபாஸ் சாலையில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக்கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அங்கு நடைபெற்று வரும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 13 கோஇ மதிப்ப்பீட்டில் நடைபெற உள்ள 28 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர், ரூ. 2 ஆயிரத்து 559 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 49 திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், 15 ஆயிரத்து 453 பயனாளிகளுக்கு ரூ. 205 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து சட்டக்கல்லூரி அருகே ரூ. 32 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பார்க் கட்டிடத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.