கன்னியாகுமரியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 நாட்கள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி சென்றுள்ளார்.
கன்னியாகுமரியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

கன்னியாகுமரி,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 2 நாட்கள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி சென்றுள்ளார். அவர் கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள கல்லடிவிளையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து கலைஞர் படிப்பகத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து நாகர்கோவில் வெப்பமூடு பூங்காவில் பொன்னப்பநாடார் சிலையையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com