காரைக்குடி அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

காரைக்குடி அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
காரைக்குடி அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, முடியரசன் சாலையிலுள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது அங்கு தங்கியுள்ள 62 பள்ளி மாணவிகளிடம் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும், அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், அம்மாணவிகளை நன்றாக படித்து, வாழ்வில் சிறப்பான நிலையினை அடைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் வாழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து, விடுதியில் உள்ள சமையல் கூடம், உணவுக் கூடம், இருப்பு அறை ஆகியவற்றை முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவிகளுக்கு இரவு உணவாக வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட இட்லி, சாம்பார், சட்னி ஆகியவற்றை ருசித்து பார்த்து அதன் தரத்தினை ஆய்வு செய்தார். பின்னர், விடுதி அலுவலர்களிடம், மாணவிகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவினை குறித்த நேரத்தில் தவறாமல் வழங்கிட வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், மாலை நேரங்களில் மாணவிகளுக்கு விடுதி காப்பாளர்கள் பாடங்கள் கற்றுத் தருவது பாராட்டுக்குரியது என்றும், பள்ளி பாடத்துடன் பொது அறிவு தகவல்களையும் மாணவிகளுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com