முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி சுற்றுப்பயண தேதி மாற்றம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி சுற்றுப்பயண தேதி மாற்றம்
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங் கியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அவர் குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில் வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் முதல்-அமைச்சர் வருகை தருவதாக இருந்தது. பின்னர் அந்த தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு 23, 24 ஆகிய தேதி களில் வருகை தருவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவரது சுற்றுப்பயண தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய புதிய அட்டவணைப்படி, வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் அவர் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல்நாள் அன்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, புத்தளம் கல்லடிவிளையில் மு.க.ஸ்டாலின் படைப்பகம் மற்றும் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

பின்னர், நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் மணிமண்டபத்தை திறந்து வைத்து அன்றைய தினம் இரவு நாகர்கோவிலிலேயே தங்கி ஓய்வெடுக்கிறார். அதன்பிறகு மறுநாள் காலை நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு, நாகர்கோவில் அரசு விருந்தி னர் மாளிகையை தூய்மைப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விழா நடைபெறும் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலத்தை சமப்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேடை மற்றும் பந்தல் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதி காரிகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com