ரூ.75 கோடியில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் - முதல்-அமைச்சர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடியில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.75 கோடியில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் - முதல்-அமைச்சர் ஆய்வு
Published on

செங்கல்பட்டு:

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி தமிழகமெங்கும் வெள்ளத் தடுப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. செம்மஞ்சேரி மற்றும் டி.எல்.எப். வளாகம் ஆகிய பகுதிகள் கடந்த பருவமழையின் போது வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட அப்பகுதிகளுக்கு வெள்ளப் பாதிப்பில் இருந்து நிரந்தர தீர்வுகாணும் வகையில், திட்டங்கள் தீட்டப்பட்டு வெள்ளத் தடுப்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, பகுதிகளில் நடைபெறும் வெள்ளத்தடுப்புப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது இவ்வெள்ளத் தடுப்புப் பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சு.முத்துசாமி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com