முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்

கோப்புப்படம்
ஜனவரி 6-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வருகிற ஜனவரி 6-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20-ந்தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தொடர், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஓய்வூதியத் திட்டங்கள் தொடர்பாக ககன்தீப் சிங் பேடி குழு முதல்-அமைச்சரிடம் அளித்த இறுதி அறிக்கை குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






