பிரதமர் மோடியை சந்தித்து ஆறுதல் கூற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடியை சந்தித்து ஆறுதல் கூற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்
Published on

சென்னை,

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தாயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார்.

பிரதமரின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தாயை இழந்த துயரம் எவராலும் தாங்க முடியாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். நாளை காலை 7 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்.

முன்னதாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்ல இருந்தார். ஆனால் பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து டெல்லி திரும்ப தாமதம் ஏற்பட்டதன் காரணமாக பயண திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com