முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள் - அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்கிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள் - அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்கிறார்
Published on

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று காலை 8 மணிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர் 8.30 மணிக்கு வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். இதையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெறுகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com