பாரதியாரின் கனவை திராவிட மாடல் ஆட்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நிறைவேற்றி வருகிறது - கனிமொழி எம்.பி

பாரதியாரின் கனவை திராவிட மாடல் ஆட்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நிறைவேற்றி வருகிறது என கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
பாரதியாரின் கனவை திராவிட மாடல் ஆட்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நிறைவேற்றி வருகிறது - கனிமொழி எம்.பி
Published on

எட்டயபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் மகாகவி பாரதி 60 ஆண்டு வைரவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்ற பொதுச் செயலாளர் டாக்டர் அறம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கனிமொழி எம்.பி, சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். சாதி,மத வேறுபாடுகள் இருக்க கூடாது என்று குரலை உயர்த்தி பாடியவர் மகாகவி பாரதி. பல்வேறு மூடநம்பிக்கைகளை, சமூகத்தில் இருந்த அழுக்குகளை துடைத்தெறிய வேண்டும் என்பதற்காக தனது கவிதை, எழுத்துக்களை தொடந்து மக்களுக்காக அர்ப்பணித்த கவிஞர் தான் பாரதி.

எல்லோருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும், சமூகநீதி கிடைக்க வேண்டும், ஆணும் பெண்ணும் சமம் என்ற மகாகவி பாரதியரின் கனவினை தான் இன்று திராவிட மாடல் ஆட்சியாக முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றி கொண்டு இருக்கிறது.

திமுக ஆட்சியில் தமிழ் எழுத்தாளர்கள், மண்ணுக்காக பாடுபட்டவர்களுக்கு அங்கீகாரமும், மரியாதையும் வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி என்பது தமிழுக்காக, தமிழருக்கான ஆட்சி. அந்த ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com