மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க முதல்-அமைச்சர் உத்தரவு: அமைச்சர் சிவசங்கர் தகவல்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க முதல்-அமைச்சர் உத்தரவு: அமைச்சர் சிவசங்கர் தகவல்
Published on

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மணப்பாறையிலிருந்து மாலை நேரத்தில் பேருந்து இயக்கப்படுகிறது. காலை நேரத்தில் இயக்கப்படுமா என்று மணப்பாறை எம்.எல்.ஏ. அப்துல் சமது கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பேக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், "காலை நேரத்தில் கூடுதலாக பேருந்து இயக்கப்படுவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com