

சென்னை,
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று காலை 8.45 மணிக்கு கொடி ஏற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் முன்களப் பணியாளர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு முதலமைச்சரால் கவுரவிக்கப்படுகின்றனர். சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் கொடி ஏற்ற உள்ளார்.