பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளிடம் நாளை வழங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி

பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளிடம் முதலமைச்சர் பழனிசாமி நாளை வழங்குகிறார்.
பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளிடம் நாளை வழங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி
Published on

சென்னை,

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வழங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து பயிர்க்கடன் ரத்து செய்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

மேலும் பயிர்க்கடன் ரத்து செய்ததற்கான ரசீது 10 அல்லது 15 நாட்களில் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வழங்குகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

கூட்டுறவு வங்கிகளில் ரூ.12,110 கோடி பயிர்க்கடன் ரத்து செய்யப்படுவதன் மூலம் சுமார். 16.34 லட்சம் விவசாயிகள் பயன்அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com