ரஜினிகாந்திடம் முதலமைச்சர் பழனிசாமி நலம் விசாரிப்பு

நடிகர் ரஜினிகாந்திடம் முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.
ரஜினிகாந்திடம் முதலமைச்சர் பழனிசாமி நலம் விசாரிப்பு
Published on

சென்னை,

ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடல்நலம் விசாரித்தார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும் அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com