

சென்னை,
நவம்பர் 20ம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுக்கு, தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவின் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் உள்ள மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் முதுகலை மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான மையங்களை தமிழகத்தில் அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும், தேர்வு மையங்களுக்கு செல்ல வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளதால், தேர்வர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும் என்றும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.