லஞ்சம், ஊழல், போதைப்பொருள்... மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் கூறிய முக்கிய அறிவுரை

எந்த தவறுக்கும் அடிமையாகி விடாதீர்கள் என்று முதல்-அமைச்சர் விஜய் மாணவர்களுக்கு கூறியுள்ளார்.
லஞ்சம், ஊழல், போதைப்பொருள்... மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் கூறிய முக்கிய அறிவுரை
Published on: 

சென்னை,

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கி சிறப்பித்து வருகிறார். முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய முதல்-அமைச்சர் விஜய் கூறியதாவது:-

நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி

என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான, என்னுடைய செல்லங்கள், நண்பா நண்பீஸ் உங்கள் எல்லாருக்கும் என்னுடைய வணக்கம். வெறும் வணக்கம் சொல்லி கடந்து போக முடியாது. உங்கள் எல்லாருக்கும் பெரிய, பெரிய நன்றிகளை சொல்ல வேண்டும். என்னுடைய நண்பா, நண்பீஸ்-க்கு கோடி கோடி நன்றிகள். இது ஒரு நிபந்தனையற்ற அன்பு, ஆதரவு தான். இப்படிப்பட்ட ஒரு வரத்தை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி.

அண்ணனாக வந்திருக்கிறேன்

நான் இங்கு முதல்-அமைச்சராக வரவில்லை. எப்போதும்போல உங்களுடைய அண்ணனாக வந்திருக்கிறேன். உங்களுக்கும் சேர்த்துதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். விஜய் எதோ அரசியல் பேசப்போகிறாரோ? 2029-க்கு இப்போதே தயார் செய்யப்போகிறாரோ? என்று நீங்கள் நினைக்கலாம். இங்கு அரசியல் பேச வரவில்லை. நான் ஓட்டு கேட்டு வரவில்லை.

உங்களை நம்பி தான் இருக்கிறேன்

இப்போதைக்கு உங்களுக்கு கட்சி, அரசியல் தேவையில்லை. நன்றாக படிங்கள். பெரிய, பெரிய உயரத்துக்கு செல்லுங்கள். உங்களை நம்பி தான் உங்களுடைய பெற்றோர், சமூகம் இருக்கிறது. நானும் உங்களை நம்பி தான் இருக்கிறேன். ஏன் தமிழ்நாடே உங்களை நம்பி தான் இருக்கிறது.

வெற்றி நிச்சயம்

அனைவரும் உங்களுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தடை போட பலர் நினைப்பார்கள். தடை போட்டால் கவலைப்படாதீர்கள். உங்களை தடுக்கிறார்கள் என்றால் நீங்கள் ஜெயிக்க போகிறீர்கள் என்பது அவர்களுக்கு உறுதியாக தெரிந்துவிட்டது என்று அர்த்தம். தடைகளை தாண்டி ஜெயித்து விட்டீர்கள் என்றால், வயிறு எரிவார்கள். நெஞ்சு எரிவார்கள். பலமாக, உறுதியாக, நம்பிக்கையோடு இருங்கள். அது இருந்தாலே வெற்றி நிச்சயம்.

அடிமையாகி விடாதீர்கள்

இது உங்களுக்கான ஒரு நிகழ்ச்சி. உங்கள் எதிர்பார்ப்பை நிரப்ப தான், உங்களுடைய அண்ணன் நான் வந்திருக்கிறேன். லஞ்சம், ஊழல், போதைப்பொருள் பக்கம் போகாதீர்கள். எந்த தவறுக்கும் அடிமையாகி விடாதீர்கள். உங்களோடு நான் இருக்கிறேன். என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள். இந்த இணைப்பு எப்போதும் தொடரும். நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும்; நல்லது மட்டுமே நடக்கும். வெற்றி நிச்சயம். நன்றி வணக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

X