

சென்னை,
தமிழகத்தின் 13-ஆவது முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்தநிலையில் சென்னை தலைமைச்செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய் முறையாக பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து அரசின் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இந்தநிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
அரசின் நிர்வாகம், செயல்பாடுகள் தொடர்பாக விஜய் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. 3 திட்டங்களில் விஜய் கையெழுத்திட்ட நிலையில் அதனை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.